×

கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கேண்டின், கார் பார்க்கிங் வசதி

கும்பகோணம், மே5:கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் இந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது.நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்களுக்கு கேண்டீன் வசதி, கார் பார்க்கிங், அனைத்து நீதிமன்றங்களில் குளிர்சாதன வசதி ஆகியவை அமைத்து தரவேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது நீதிமன்றத்திற்கு மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனுவை வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் விவேகானந்தன் தலைமையில், செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர். தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், நீதிமன்றத்தில் ஏற்படுத்த கூடிய கேண்டீன் வசதி, கார் பார்க்கிங் வசதிகள் குறித்து உரிய அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெஸிந்தா மார்ட்டின், கூடுதல் மாவட்ட நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதித்துறை நீதிபதி சண்முகபிரியா, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கேண்டின், கார் பார்க்கிங் வசதி appeared first on Dinakaran.

Tags : Kumbakonam Integrated Court ,Kumbakonam ,Kumbakonam Unified Court ,Chief Criminal Judicial Arbitration Court ,Additional ,Dinakaran ,
× RELATED கும்பகோணம், மன்னார்குடி சாலையில்...